அறிவியல்ல இருந்து ஆரம்பிப்போமே.. ஈக்யூனாக்ஸ் (Equinox) அப்புடீன்றது ஒரு வருசத்துக்கு ரெண்டு தடவ வரும். ஈக்யூனாக்ஸ்'ஆ அப்புடினா?!.. அது ஒரு நிகழ்வு. அதாவது பூமியின் மத்திய தரை ரேகையும் (Equator) சூரியனோட மையமும் ஒரே நேர் கோட்டுல வந்து நிக்கும். உங்க உச்சி மண்டைக்கு நேரா சூரியன் நின்னா எப்படி இருக்கும், அந்த நிகழ்வுக்கு பேரு தான் ஈக்யூனாக்ஸ். அன்னிக்கு இரவும் பகலும் சரி சமமா இருக்கும், அதாவது இரவு மற்றும் பகலின் கால அளவு ஒரே அளவுல இருக்கும். இது ஒவ்வொரு வருஷமும் மார்ச் திங்கள் 20/21 மற்றும் செப்டெம்பர் திங்கள் 20/21 தேதிகள்ல நடக்கும். சரி, இதை எதுக்கு இப்போ இவன் சொல்லிட்டு இருக்கான்னு பாக்குறீங்களா.. அய்யா.. என்னிக்கு மனுஷன் விவசாயம் செய்ய ஆரம்பிச்சானோ அன்னிக்கு இருந்து அவன் உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்ச ஒரே விஷயம் வானம். மனிதனின் தேடுதல்களுக்கான விடைகள் அனைத்தையும் அவன் வானத்தில் இருந்தே பெற்றுக் கொண்டான். அது வாழும் முறைமை ஆகட்டும், ஆன்மிகம் ஆகட்டும், அறிவியல் ஆகட்டும், அவனுடைய தேடல்களும் கேள்விகளும் மேல் நோக்கியே சென்றன. வானம் (விண்வெளி'னு அறிவியல் பெரியவா சொல்லுவா) தனக்குள் ...
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்