நாலு கால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டு இருந்த மனிதன், இரண்டு கால்களில் நடக்கத் தொடங்கிய பின்(டார்வினின் கோட்பாடு பொய்யாகாது என நம்புவோமாக) பூமியின் முகமும் மாறத் தொடங்கிற்று. சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் சுழலத் தொடங்கிய இந்த பரிணாமக் கடிகாரம், 4 மில்லியன் வருடங்களுக்கு முன் வேகம் பெற்றது. அப்போது தான் பூமியில் முதன் முதலாக மனிதனின் மூதாதையர்கள் (ஆப்பிரிக்காவிலோ அல்லது அமெரிக்காவிலோ) நடமாடத் தொடங்கினர். தற்போதைய மனிதனும் அன்றிலிருந்து தான் உருப்பெறத் தொடங்கினான். ஆரம்ப காலத்தில் சிறு சிறு குழுக்களாய், நாடோடியாய், மிருகங்களை வேட்டை ஆடிக் கொண்டும், பழங்களைப் பறித்தும், கிழங்குகளைத் தோண்டிக் கொண்டும் சுற்றிக் கொண்டிருந்தவன், ஆற்றுப்படுகைகளில் ஆற அமர பழகிக் கொண்டிருந்தான். குழுக்கள் நாகரிகங்களாய் உருப்பெற்றன. நாகரிகங்கள் பண்பாடுகளாயும், பண்பாடுகள் இனங்களாயும், இனங்கள் நாடுகளாயும் மாறத் தொடங்கின (மாற்றம் தானே மானிடத் தத்துவம்). ஆற்றுப்படுகைகளில் வளமான விளைநிலங்களைக் கண்டவன் மெல்ல மெல்ல குடியேறத் தொடங்கினான். இப்படிக் குடியேறியவர்களே பிற்கால நவீன சமுதாயக் கட்டமைப்புக்கு (அட நாம தாங்க அது)...
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்